Wednesday, February 8, 2012

Wednesday, February 2, 2011

Thursday, October 28, 2010

என் நோட்டுப் புத்தகத்தில்
பலக் கவிதைகள்
முடித்தும்,
முடிவுப் பெறாமலே..
நீ ஒரு முறையாவது
படித்தால் தானே,
என் கவிதைக் கூட
"நிறைவு" பெறும்....

இதழ்-முத்தம்

என் பாலையில் உன்னால் அடிக்கடி


பூக்கும் உன்நினைவு மொட்டுக்கள்

முத்தமெனும் நீரை எதிர்ப்பார்த்தப்படி

இதழ் குவித்து 'அப்புறம்' என்று நீ

சொல்லும் ஒற்றை சொல்லில்

ஒட்டிக்கொள்கிறது

உன் இதழுடன் என் நெஞ்சமும்


சுட்டெரித்த உன் ஒற்றை பார்வையில்

கரிந்து கரைந்து ஓடிய என் நாணம் இதழில்

புன்னகையாய் தவழும் சம்மதத்தின்

மொழியினை பேசியவாறு


புரியவில்லை அன்பே.......

நாம் முத்தமிடுகையில் காதலர்கள்

நாமா இல்லை நம் இதழ்களா என்று



அறியாமல் நீ கொடுக்கும் உன்

ஒற்றை முத்ததிற்க்காக ஏங்கும்
அன்பே.......

Wednesday, October 27, 2010


கடிதம் எழுத நினைத்தேன்
கவிதை எழுதுகிறேன் !

நீ

பேசுவது
என்னவோ
வார்த்தை தான் !
ஆனால் எனக்கு ஏனோ கீதையாக கேட்கிறது!

நீ
பார்ப்பது
என்னமோ
பார்வைதான்!
ஆனால் எனக்கு ஏனோ மின்னலாய் தெரிகிறது !

நீ
நடக்கிற தடம்
கால் வரைந்த ஓவியம்!

நீ
சிரித்தாள்
நான்
சிறை படுகிறேன்!

நீ
யாரடி ?
என்னை
ஆள வந்த ஆட்சியா ?
இல்லை
வீழ்த்தவந்த சூழ்ச்சியா ?

இப்படிக்கு குழப்பத்துடன்
உன் இதயத்தின் சொந்தக்காரன்

-சாந்தன்-

Tuesday, October 26, 2010

Friday, May 28, 2010




இந்தக் காம்பில் இந்தப் பூ எப்படி வந்தது என்று
என் கவிதையை பார்த்து உலகம் வியக்கிறது!
அதற்கு தெரியாது விதையாக இருந்தது நீ என்று...