Wednesday, October 27, 2010


கடிதம் எழுத நினைத்தேன்
கவிதை எழுதுகிறேன் !

நீ

பேசுவது
என்னவோ
வார்த்தை தான் !
ஆனால் எனக்கு ஏனோ கீதையாக கேட்கிறது!

நீ
பார்ப்பது
என்னமோ
பார்வைதான்!
ஆனால் எனக்கு ஏனோ மின்னலாய் தெரிகிறது !

நீ
நடக்கிற தடம்
கால் வரைந்த ஓவியம்!

நீ
சிரித்தாள்
நான்
சிறை படுகிறேன்!

நீ
யாரடி ?
என்னை
ஆள வந்த ஆட்சியா ?
இல்லை
வீழ்த்தவந்த சூழ்ச்சியா ?

இப்படிக்கு குழப்பத்துடன்
உன் இதயத்தின் சொந்தக்காரன்

-சாந்தன்-

No comments:

Post a Comment